தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-10-06 19:45 GMT

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று மாலையில் காலபைரவருக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மேலும் திண்டுக்கல்லின் முக்கிய கோவில்களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை மற்றும் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சொர்ண ஆகர்ஷண பைரவரை திரளான பக்தர்கள் வழிபட்டனர். சாவடிபஜாரில் அமைந்துள்ள காலபைரவர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கோபால்பட்டி கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில் சொர்ண ஆகாஷன பைரவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் கோபால்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்