பாத்திமா அன்னை ஆலய தேர் பவனி

பாத்திமா அன்னை ஆலய தேர் பவனி நடைபெற்றது;

Update:2022-08-21 00:39 IST

திருச்சி புத்தூர் பாத்திமா அன்னை ஆலய 65-ம் ஆண்டு பெருவிழா கடந்த 12-ந்தேதி திருச்சி மறைமாவட்ட ஆயர் ஆரோக்கிராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. நேற்று மாலை திருச்சி மறை மாவட்ட முதன்மை குரு அந்துவான், மரியன்னை பேராலய பங்கு தந்தை சகாயராஜ் ஆகியோர் தேர்த்திருவிழா திருப்பலியை நடத்தினர். தொடந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் பாத்திமா அன்னை பவனி வந்தார். தேர்பவனியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நற்கருணை பெருவிழா நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை பாஸ்கரன், உதவி பங்குதந்தை பிரான்சிஸ் செலஸ்டின் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்