தமிழகத்தில் கல்வித்துறையில் அரசியல் தலையீடு அதிகம் - தமிழிசை சவுந்தரராஜன்

புதிய கல்விக் கொள்கை பற்றிய மாநாட்டு நிகழ்சியில் பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ளதாக தெலுங்கானா-புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2023-11-04 16:41 GMT

"புதிய கல்விக்கொள்கை பற்றிய மாநாட்டிற்காக மதுரை வந்துள்ளேன். வகுப்பறையில் இருந்து உலக அளவிற்கு மாணவர்களை உயர்த்துவதற்கு புதிய கல்விக்கொள்கை உதவும். ஆனால் அது தமிழகத்தில் அரசியல் ஆக்கப்பட்டு இருக்கிறது.

நீட் தேர்விலும் சரி, புதிய கல்விக்கொள்கையிலும் சரி மாணவர்கள் சிறப்பாக செயலாற்ற தயாராக இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கல்வியில் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும். வேண்டாதவற்றில் தலையிட்டு, வேண்டியதை விட்டுவிடுகிறார்கள்.

ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்றார்கள். ஆனால் கையெழுத்து இயக்கத்திற்குதான் முதல் கையெழுத்து என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது. பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து தற்போது நீட்டை பற்றி தெரியாதவர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டிருக்கிறார்கள்."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்