திருவேட்டீசுவரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திருவேட்டீசுவரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் இன்று நடக்கிறது

Update: 2023-05-05 09:53 GMT

சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டையில் மிகவும் பழமை வாய்ந்த செண்பகாம்பிகை உடனுறை திருவேட்டீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை(சனிக்கிழமை) வரை விழா நடைபெறுகிறது.

விழாவில் அதிகார நந்தி சேவை, தேரோட்டம் நடந்தது. பின்னர் 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடைபெற்றது. மாடவீதிகள் வழியாக உலா வந்த நாயன்மார்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி த.கங்காதேவி, தக்கார் பி.கே.கவெனிதா ஆகியோர் செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்