வளவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வளவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.;

Update:2022-05-22 22:48 IST

வளவனூர்,

விழுப்புரம் அடுத்த வளவனூரில் பிரசித்திபெற்ற வேதவல்லி நாயகா சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம், மூலவர் லட்சுமி நாராயண பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து திருமஞ்சனம் நடந்தது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் லட்சுமி நாராயண பெருமாள் வேதவல்லி நாயகா தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதைத்தொடர்ந்து, உற்சவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலிக்க, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆராவமுதன் பட்டாச்சாரியார், வளவனூர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்