காரைக்குடி
கோவிலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் பாதரக்குடி, குன்றக்குடி, சின்ன குன்றக்குடி தமிழ்நாடு கெமிக்கல் தொழிற்சாலை பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் லதா தேவி தெரிவித்துள்ளார்.