வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யும் சுற்றுலா பயணிகள்

முதுமலையில் வனவிலங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் இடையூறு செய்கின்றனர்.

Update: 2023-09-23 20:15 GMT

கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகம் வழியாக கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவுக்கு இயக்கப்படுகிறது. முதுமலை வழியாக செல்லும்போது காட்டுயானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோரம் முகாமிட்டு இருப்பதை கண்டு ரசிக்க முடியும். அப்போது மான்கள், மயில்களுக்கு நொறுக்கு தீனிகளை சில சுற்றுலா பயணிகள் வழங்குகின்றனர். இதை தடுக்க வனத்துறையினர் அடிக்கடி ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையிலும், சுற்றுலா பயணிகள் பல இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட இடையூறுகளில் ஈடுபட்டனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்