ஈரோடு கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - அருவியில் குளித்து உற்சாகம்

விடுமுறையை முன்னிட்டு கொடிவேறி தடுப்பணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2024-04-28 13:02 GMT

ஈரோடு,

கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியத்துவம் பெற்றதாகும். ஞாயிறு மற்றும் பிற விடுமுறை நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரிக்கு வருவார்கள்.

அங்கு சுற்றுலா பயணிகள் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல கொட்டும் தண்ணீரில் குளித்தும், அணை அருகே உள்ள பொரித்த மீன்களை வாங்கி ருசித்தும் மகிழ்வார்கள். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதாலும், கோடை விடுமுறை தொடங்கி இருப்பதாலும் மக்கள் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று வார விடுமுறை தினம் என்பதால் கொடிவேறி தடுப்பணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், அணையின் மேற்பகுதியில் பரிசல் பயணம் மேற்கொண்டும், அங்குள்ள பூங்காவில் உற்சாகமாக விளையாடியும் சுற்றுலா பயணிகள் பொழுதைக் கழித்தனர். கொடிவேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்