ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்-படகு சவாரி செய்து உற்சாகம்
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.;
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். அவர்கள் லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ராஜா தோட்டம், சேர்வராயன் கோவில், கரடியூர் காட்சி முனை, படகு இல்லம் ஆகிய இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர்.
காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால் கடும் குளிர் நிலவியது. வெப்பத்தை தணிக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இதமான சீதோஷ்ணநிலை காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
படகு சவாரி
இதற்கிடையே மாலையில் சுமார் அரை மணிநேரம் பலத்த மழைபெய்தது. இதனால் மேகமூட்டம் தொலைந்து இருந்தது. சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டியதால் ஏற்காடு படகு இல்லத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.