தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை
திருவண்ணாமலையில் தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.;
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சங்கர் (வயது 52). இவர் திருவண்ணாமலை ஜோதி பூ மார்க்கெட்டில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
இவர் கடந்த ஒரு வாரமாக வீட்டில் யாரிடமும் சரிவர பேசாமல் மனக்குழப்பத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சங்கர் நேற்று திருவண்ணாமலை தென்றல் நகரில் வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு கொண்டார்.
இதை கண்ட சங்கரின் மனைவி யாமினி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சங்கரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.