ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.;

Update:2023-03-25 00:15 IST

லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்

கோவை மாவட்டம் காரமடையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கு அந்த பகுதி விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் உற்பத்தி செய்த விளைபொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். அவற்றை மேட்டுப்பாளையம் பகுதி வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.

அந்த வியாபாரிகளுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமைச்சான்று வழங்கப்படுகிறது. உரிமைச்சான்று வழங்க காரமடை ஒழுங்கு முறை விற்பனை கூட சூப்பிரண்டு லஞ்சம் கேட்பதாக வியாபா ரிகள் மற்றும் விவசாயிகள் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பினார்கள்.

முற்றுகை போராட்டம்

இது தொடர்பாக விசாரணை நடத்த கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட நடவடிக்கை தீர்ப்பாய ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டது. அவர், விசாரணைக்கு ஆஜராகுமாறு காரமடை ஒழுங்குமுறை விற்பனைக்கூட சூப்பி ரண்டுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

மேலும் புகார் கூறிய வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.இதையடுத்து ராமநாதபுரம் வேளாண் விற்பனைக்கூட அலுவல கத்தில் தமிழ்நாடு பாக்கு உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகள் சம்மேளன தலைவர் சீனிவாசன் தலைமை யில் தயாநிதி, அய்யா சாமி, பழனிசாமி, கோமதி, காளியம்மாள் உள்பட வியாபாரிகள் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லஞ்சம் கேட்டு மிரட்டல்

இதை அறிந்த ராமநாதபுரம் போலீசார் விரைந்து வந்து வியாபா ரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, வியா பாரிகள் மட்டுமின்றி விவசாயிகளிடமும் காரமடை விற்பனைக் கூட சூப்பிரண்டு லஞ்சம் கேட்டு மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று வியாபாரிகள் கூறினர்.

இதையடுத்து வியாபாரிகளிடம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இது தொடர்பாக 10 நாட்களுக்குள் விசாரணை நடத்தி உரிய நடவடிக் கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்