புகையிலை பொருட்கள், சாராயம் கடத்தல்; 2 பேர் கைது

திண்டிவனம் பகுதியில் புகையிலை பொருட்கள், சாராயம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-09-18 00:15 IST

திண்டிவனம்

திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையில் போலீசார் காவேரிப்பாக்கம் ஏரிக்கரை அருகே ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை மடக்கி சோதனை செய்தபோது வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் 1,125 பாக்கெட் புகையிலை பொருட்கள், 10 லிட்டர் சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திண்டிவனம் நேதாஜி நகர், சோழன் தெருவை சேர்ந்த மணிகண்டன்(வயது 43), நல்லிய கோடன் நகர் கோபால் தெரு ருக்மாந்தன்(48) என்பதும், அவர்கள் இருவரும் புகையிலை பெருட்கள், சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து புகையிலை மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்