இளநிலை உதவியாளர்களுக்கு பயிற்சி

அலுவலக நடைமுறைகள் குறித்து இளநிலை உதவியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.;

Update:2023-09-13 00:24 IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 25 இளநிலை உதவியாளர்கள் வேலூர் மாவட்டத்தில் பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்பு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற துணை கலெக்டர் முருகன், தாசில்தார் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பயிற்சியில் எவ்வாறு பணி மேற்கொள்ள வேண்டும். அலுவலக நடைமுறைகள், பொதுமக்களிடம் எவ்வாறு மனுக்கள் பெற வேண்டும், பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்