மாரடைப்பு தடுப்பு சிகிச்சை முறைகள் குறித்து பயிற்சி

வேலூர் அரசு மருத்துவமனையில் மாரடைப்பு தடுப்பு சிகிச்சை முறைகள் குறித்து பயிற்சி நடைபெற்றது.

Update: 2023-10-11 18:28 GMT

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதய பிரிவு சார்பில் மாரடைப்பு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து சிறப்பு பயிற்சி நேற்று நடந்தது. கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கி, பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த டாக்டர்கள், நர்சுகள், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

இதய சிகிச்சை பிரிவு துறை தலைவர் சபாபதி, இதய நோய் பிரிவு டாக்டர்கள் சுபாஷ் சந்திர போஸ், இம்ரான் நியாசி ஆகியோர் இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கும் முறைகளை விரிவாக எடுத்துரைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்