கோவிலில் திருடியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கை தர்ணா- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு

கோவிலில் திருடியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கை தர்ணா- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்புகோவிலில் திருடியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-21 21:18 GMT

கோவிலில் திருடியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கை தர்ணா- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்புகோவிலில் திருடியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் பொருட்கள் திருட்டு

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர்.

ஈரோடு காந்திநகர் கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்த திருநங்கை ஆயிஷா பாத்திமா, பாபு ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கனிராவுத்தர் குளம் பகுதியில் ஓங்காளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கோவில் கதவை திறந்து பூஜை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது கோவிலில் இருந்த குத்துவிளக்கு, பித்தளை பொருட்கள் போன்றவை திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து விசாரித்தபோது அதே பகுதியில் உள்ள இரும்புக்கடையில் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. உடனே இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று எங்கள் தரப்பில் புகார் கொடுத்தோம். ஆனால் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடமும் மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

பரபரப்பு

மனுவை கலெக்டரிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்த அவர்கள் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து திருநங்கை ஆயிஷா பாத்திமா கூறுகையில், 'கோவில் பொருட்கள் திருடியவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஈரோடு சூரம்பட்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் போலீசார் கூறுகையில், கோவில் பொருட்கள் திருடிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கை திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. 

Tags:    

மேலும் செய்திகள்