நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற நரசிம்மசாமி கோவில் உள்ளது. இங்கு கோகுலாஷ்டமியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. பின்னர் நரசிம்மர் மற்றும் ரெங்கநாதர் சாமிகள் சிறப்பு அலங்காரம் ெசய்யப்பட்டது. பின்னர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதையொட்டி நரசிம்ம சாமி கோவில் அருகே உறியடி நிகழ்ச்சியும், வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் இளைஞர்கள் ஏராளமானோர் உற்சாகமாக கலந்து கொண்டனர். இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.