செல்போன் பறித்த மாணவர் உள்பட 2 பேர் கைது

செல்போன் பறித்த மாணவர் உள்பட 2 பேர் கைது;

Update:2022-05-22 19:45 IST

இடிகரை

கோவை சாய்பாபா காலனியில் உள்ள வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது57). இவர் சம்பவத்தன்று செல்போன் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென்று இவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து விஜயகுமார் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து வேலாண்டிபாளையம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவரின் மகன் டூவிலர் மெக்கானிக்கான செல்வராஜ் (20) மற்றும் 17 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை கைது செய்தனர்.

----

மேலும் செய்திகள்