புகையிலை விற்ற 2 பேர் கைது

புகையிலை விற்ற 2 பேர் கைது;

Update:2022-06-18 21:43 IST

நெகமம்

நெகமம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நெகமம் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் முகமது மற்றும் போலீசார் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது செங்குட்டைப்பாளையத்தில் மளிகை நடத்தி வரும் சுடலைமணி(வயது 47) என்பவர் 10 பாக்கெட் புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், சுடலைமணியை கைது செய்தனர். இதேபோன்று சின்னேரிபாளையம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற சரவணன்(45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்