மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி கொத்தனார் பலி
மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி கொத்தனார் பலியானார்.;
திருப்புவனம்
மதுரை மாவட்டம் விளாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 45). கொத்தனார். இவர் தற்சமயம் திருப்புவனம் பக்கம் உள்ள மேலராங்கியம் கிராமத்தில் வசித்து வந்தார்.
நேற்று கொத்தனார் வேலை பார்க்க பூவந்தி வந்து விட்டு ஊருக்கு திரும்பினார். திருப்புவனம் பழையூர் அருகே சென்ற போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி ரோட்டோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ராஜாராம் இறந்தார். இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.