உத்தமபாளையம் ஆசிரியர் பயிற்று நிறுவனத்தில்விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்:நாளை மறுநாள் நடக்கிறது
உத்தமபாளையம் ஆசிரியர் பயிற்று நிறுவனத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: நாளை மறுநாள் நடக்கிறது;
உத்தமபாளையம் ஆசிரியர் பயிற்று நிறுவன வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுக்கலாம். மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.