விழுப்புரம்: அரசு மருத்துவமனை அருகே முள் புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு...!

விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகே முள் புதரில் பச்சிளம் குழந்தை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-05-25 15:30 GMT


விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் ஆடிட்டோரியம் பின்புறம் முள் புதரில் இன்று மாலை 5 மணியளவில் பச்சிளம் குழந்தை அழும் சத்தத்தை ஆடு மேய்பவர்கள் கேட்டு அருகில்சென்று பார்த்த போது ஆண் குழந்தை என தெரியவந்தது.

இது பற்றி அவர்கள் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்து. குழந்தையை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து. இது பற்றிய தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் அரி வினாயகம் மருத்துவமனைக்கு சென்று குழந்தையாருடையது என விசாரணை நடத்தி வருகின்றார்

பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தையை புதரில் வீசிய சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது .

Tags:    

மேலும் செய்திகள்