திமுக அரசை கண்டித்து விழுப்புரம்- வானூரில் பா.ஜ.க.வினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் 83 பேர் கைது

தி.மு.க. அரசை கண்டித்து விழுப்புரம்- வானூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 83 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-09-07 00:15 IST

விழுப்புரம் தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டியல் இன மக்களுக்கு வழங்கும் மத்திய அரசின் நலத்திட்ட நிதியை தி.மு.க. அரசு, பட்டியல் இன மக்களுக்கு வழங்காமல் மாற்றுத்திட்டங்களுக்கு பயன்படுத்தி வருவதையும், நிதியை மத்திய அரசுக்கு திரும்ப அனுப்புவதையும் கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சுந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார். விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் முரளி, சதாசிவம், மாவட்ட துணைத்தலைவர்கள் வேலு, பார்த்திபன், மாநில செயற்குழு உறுப்பினர் சிவதியாகராஜன், மாவட்ட செயலாளர் குபேரன், நகர தலைவர்கள் வடிவேல் பழனி, விஜயன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சரவணன், நகர பொதுச்செயலாளர்கள் சிவராஜ், ஜெகதீஷ், இளைஞரணி மாவட்ட தலைவர் ஹரிபிரசாத், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கைது

உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 52 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பட்டியல் அணி ஒன்றியத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். உடனே வானூர் போலீசார் விரைந்து சென்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்