கரூர் ஆண்டாங்கோவில் தடுப்பணையை தாண்டி வழிந்தோடி செல்லும் தண்ணீர்

கரூர் ஆண்டாங்கோவில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் வழிந்தோடி செல்கிறது.

Update: 2022-08-02 19:48 GMT

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4,047 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.

இதனால் இந்த பகுதிகளில் நெல், கரும்பு, மஞ்சள், மக்காச்சோளம், வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். இதேபோல் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது. இந்தநிலையில் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

வழிந்தோடி செல்லும் தண்ணீர்

இதனால் அமராவதி ஆற்றுக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி 2,056 கனஅடி தண்ணீர் வந்தது. இதையடுத்து அமராவதி அணையில் இருந்து நேற்று காலை நிலவரப்படி 1,904 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது கரூர் நகர எல்லைப்பகுதியான செட்டிபாளையம் கதவணைக்கு வந்தடைந்தது. தொடர்ந்து ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு 2,189 கனஅடியாக வந்தது. இதனால் ஆண்டாங்கோவில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் வழிந்தோடி செல்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்