சாராயம், போலி மதுபாட்டில் விற்பனை குறித்து தகவல் அளிக்க வாட்ஸ் அப் எண்
சாராயம், போலி மதுபாட்டில் விற்பனை குறித்து தகவல் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் பற்றிய தகவல் அளிக்க மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் புதியதாக பிரத்யேக வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. சாராயம் காய்ச்சுதல், ஊறல்கள் போடுதல், போலி மதுபானம், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மது விற்பனை மற்றும் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோரின் தகவல்களை 9498188755, 86376 61845 ஆகிய வாட்ஸ் அப் எண்களில் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.