பொதுநல வழக்கில் தவறான தகவல் தெரிவித்தால் ஏன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி

பொதுநல வழக்கில் தவறான தகவல் தெரிவித்தால் ஏன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கக்கூடாது? மதுரை ஐகோர்ட்டு கேள்வி.;

Update:2022-08-18 02:15 IST

மதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரைகுட்பட்ட கிராம பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து முறைகேடாக சிலர் பெற்ற பட்டாவை ரத்து செய்ய உத்தரவிடகோரி பாலகிருஷ்ணன், வின்சென்ட் உள்பட சிலர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, சம்பந்தப்பட்ட புறம்போக்கு நிலத்தை பயன்படுத்திய வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே சம்பந்தப்பட்டவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த பட்டாக்களை ரத்து செய்யக்கோரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியாகிவிட்டது. தற்போது மனுதாரர்கள் அதே கோரிக்கையுடன் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளனர். இது ஏற்புடையதல்ல என வாதாடினார்.

இதையடுத்து நீதிபதிகள், ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கலான வழக்கு தள்ளுபடியாகியுள்ளது. மீண்டும் எவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளீர்கள்?.

ஒரு பொதுநல வழக்கில் ஒரு உத்தரவுதான் பிறப்பிக்க முடியும். மீண்டும், மீண்டும் மனு தாக்கல் செய்து கோர்ட்டின் நேரத்தை வீணடிப்பது மட்டுமில்லாமல், பொதுநல வழக்கு என்ற பெயரில் கோர்ட்டில் தவறான தகவலை தந்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும். இந்த வழக்கின் மனுதாரர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்போம் என நீதிபதிகள் எச்சரித்தனர். பின்னர் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்