சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறக்கூடாது என்ற எண்ணத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-11 16:09 GMT

வேலூர்,

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்போது, தமிழகத்தில் கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு என்ன தயக்கம் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து வேலூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;

"தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 22.5% இட ஒதுக்கீடு கிடைக்கும். ஆனால் அது கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழக அரசு இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறக்கூடாது என்ற எண்ணத்தில்தான், சாதிவாரி கணக்கெடுப்பை இன்னும் நடத்தாமல் இருக்கிறார்கள்.

மேலும் தங்களுக்கு அதிகாரம் இல்லை என்பது போன்ற காரணங்களை சொல்கிறார்கள். பஞ்சாயத்து தலைவருக்கே கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருக்கும்போது, முதல்-அமைச்சருக்கு அதிகாரம் இல்லையா? சாதிகளின் எண்ணிக்கை எங்களுக்கு தேவையில்லை. சுமார் 2.3 கோடி குடும்பங்களின் நிலை குறித்து கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று கேட்கிறோம்."

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்