திட்டக்குடியில் மின்சாரம் தாக்கி பெண் பலி

திட்டக்குடியில் மின்சாரம் தாக்கி பெண் உயிாிழந்தாா்.;

Update:2023-01-28 00:15 IST

திட்டக்குடி, 

திட்டக்குடி அடுத்த கோழியூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மனைவி மலர்கொடி(வயது 52). இவர் திட்டக்குடி பொன்னுசாமி நகரில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் சாப்பிட்டு கை கழுவும் போது வீட்டின் மாடியில் பின்புறம் சென்று கொண்டிருந்த மின்கம்பி மீது மலர்க்கொடியின் கை பட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்