வந்தவாசி அருகே மின்னல் தாக்கி பெண் பலி

வந்தவாசி அருகே மின்னல் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-11-12 16:49 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த புதுவணக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கா். அவரது மனைவி சொர்ணம் (வயது 38). இவர், வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சொர்ணம் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் மற்றும் தெள்ளார் போலீசார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் இதுகுறித்து தெள்ளார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்