வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.;

Update:2022-09-02 18:58 IST

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோசூர் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளர் தங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை தர மறுப்பதாக கூறி சுமார் 50-கும் மேற்பட்ட பெண்கள் அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்