சத்தியமங்கலம் அருகே கோவிலுக்கு தீர்த்தக்குடம் எடுத்து வந்து பெண்கள் வழிபாடு

சத்தியமங்கலம் அருகே கோவிலுக்கு தீர்த்தக்குடம் எடுத்து வந்து பெண்கள் வழிபாடு;

Update:2023-06-30 02:25 IST

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே குந்திபொம்மனூர் என்ற கிராமத்தில் பழமை வாய்ந்த ஊற்றுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சிதிலமடைந்து விட்டதால் அதனை சீரமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறது.

நேற்று கோவிலில் புதிதாக வைத்து பூஜைசெய்யப்படும் அம்மன் சிலையை மலர்களால் அலங்கரித்து ஊர்வலமாக பெண்கள் தீர்த்தகுடம் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு கொண்டு வந்தார்கள். பின்னர் தீர்த்தத்தை ஒரு தொட்டியில் ஊற்றினார்கள். அதன்பின்னர் அதில் அம்மன் சிலையை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்