மகளிர் தின விழா

அம்பை கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.;

Update:2023-03-08 01:13 IST

அம்பை:

அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் சவுந்திரராஜா தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் தீபாலட்சுமி வரவேற்றார். கல்லூரி செயலர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளருமான விஜிலா சத்யானந்த் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சிகளை தங்க செல்வி தொகுத்து வழங்கினார். முடிவில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆயிஷாள் பீவி நன்றி கூறினார்.

கல்லூரி சுயநிதி பிரிவு இயக்குனர் டாக்டர் வேலையா, உதவி பேராசிரியர் தனலெட்சுமி, பேராசிரியர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்