விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
சங்கராபுரம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேலப்பிள்ளை மகன் காத்தமுத்து (வயது 53) கூலித்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும் மதுகுடிக்கும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் வீட்டில் உள்ளவர்களிடம் மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி பார்த்தனர். இருப்பினும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சங்கராபுரம், பூட்டை சாலையில் உள்ள பழைய ஆணி தொழிற்சாலை முன்பு காத்தமுத்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.