தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;
அன்னதானப்பட்டி
சேலம் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அன்னதானப்பட்டி போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.