தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.;

Update:2022-09-23 00:15 IST

அன்னூர், 

கோவை சுந்தராபுரம் முதலியார் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). ஒர்க் ஷாப் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் குரும்ப பாளையம் -வாகராயம்பாளையம் ரோடு மேளபாளையம் செந்தோட் டம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நாய் ஒன்று திடீரென்று ரோட்டின் குறுக்கே ஓடி வந்தது. இதனால் நிலை தடுமாறி செல்வராஜ் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நே்றறு செல்வராஜ் இறந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்