வாகனம் மோதி தொழிலாளி சாவு; லோடு ஆட்டோ டிரைவர் கைது

வள்ளியூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி இறந்த வழக்கில் லோடு ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-06-24 01:20 IST

வள்ளியூர் (தெற்கு)

வள்ளியூர் அருகே உள்ள மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்தவர் பாலசந்திரன் மகன் ஞானசேகரன் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் வள்ளியூருக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். வள்ளியூரை அடுத்த தனியார் கல்லூரி அருகே சென்ற போது எதிரே வந்த லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக ஞானசேகரன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த பகுதியில் உள்ளவர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி லோடு ஆட்டோவை ஓட்டி வந்த ராஜபுதுரை சேர்ந்த கிறிஸ்டோபர் (21) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்