ஏணியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

ஏணியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு;

Update:2022-09-11 21:51 IST

தக்கலை:

தக்கலை அருகே உள்ள வில்லுக்குறி மாடத்தட்டுவிளையை சேர்ந்தவர் மரியமிக்கேல் (வயது 68), தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மரியமிக்கேல் நேற்று முன்தினம் காலையில் அதே பகுதியை சேர்நத் கட்டிட காண்டிராக்டர் சுரேஷ் என்பவருடன் வேலைக்கு சென்றார். அவர்கள் தக்கலை அருகே சால்விளையில் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, மரியமிக்கேல் ஏணியில் ஏறியபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மரியமிக்கேல் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்