மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி;

Update:2022-06-18 21:37 IST

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள கல்லாபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 70). இவரது மகன் முத்துராஜ்(37). தொழிலாளி. இவர்  குளியல் அறையில் இருந்து குளித்துவிட்டு வீட்டுக்குள் சென்றார். அப்போது மின்விசிறிக்கு செல்லும் மின் ஒயர் தரையில் போடப்பட்டு இருந்தது. அதை எதிர்பாராதவிதமாக முத்துராஜ் மிதித்தார். உடனே அவரை மின்சாரம் தாக்கியது. இதை கண்ட அவரது அண்ணன் மணிராஜ், சுவிட்சை ஆப் செய்து முத்துராஜை மீட்டார். எனினும் படுகாயம் அடைந்து இருந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், முத்துராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்