உலக புத்தக தின விழா
திருச்சுழியில் அரசு கிளை நூலகத்தில் உலக புத்தக தினவிழா நடைபெற்றது.;
திருச்சுழி,
திருச்சுழியில் அரசு கிளை நூலகத்தில் உலக புத்தக தினவிழா மற்றும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் தணிக்கையாளர் நாகநாதன் தலைமை தாங்கினார். மின்வாரிய அலுவலர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சுந்தர். அழகேசன் வரவேற்றார். ஆசிரியைகள் லதா, ராஜி, ஆசிரியர் கதிரேசன், அழகர்சாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.மதுரை டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரி மாணவி கீர்த்தனா யோகா செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். திருச்சுழி மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கருமலை மின்சேமிப்புக்கலனை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். இதில் ஆசிரியைகள், ஆசிரியர்கள், நூலக பணியாளர்கள், மாணவர்கள், வாசகா்கள் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் பாஸ்கரன் நன்றி கூறினார்.