உலக தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;

Update:2022-08-02 19:31 IST

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் நேற்று முன்தினம் முதல் தாய்ப்பால் வார விழா தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்விழாவையொட்டி குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் காலை கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் அங்கன்வாடி பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்