ஆதி அய்யனார் கோவிலில் வருடாபிஷேகம்

திருப்பரங்குன்றம் அருகே ஆதி அய்யனார் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.;

Update:2023-08-31 02:35 IST

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் அய்யனார் காலனியில் பழமை வாய்ந்த எஜமான் ஆதி அய்யனார் உடனுறை ஸ்ரீ பூரணகலை, ஸ்ரீபுஷ்கலை கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் 4-வது ஆண்டு வருடாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் கும்பத்தில் புனிதநீர் நிரப்பி, அக்னி வளர்க்கப்பட்டு யாகசாலை பூஜை நடந்தது. இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க கும்பம் புறப்பாடாகி கருவறைக்கு சென்றது. அங்கு ஸ்ரீபூரண கலை, ஸ்ரீ புஷ்கலை உடனமர் ஸ்ரீ ஆதி அய்யனாருக்கு புனிதநீர் ஊற்றி மகா அபிஷேகம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்