பூத் சிலிப் இல்லாமல் ஓட்டுப் போட முடியுமா? சாத்தியம் ஆக்கும் தேர்தல் ஆணைய செயலி..இதோ முழு விவரம்

நாளை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடி எங்கு இருக்கிறது உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்தின் செயலி மூலமாக அறிந்து கொள்ள முடியும். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

Update: 2024-04-18 11:23 GMT

சென்னை,

வாக்காளர் அடையாள அட்டை இல்லையே! வாக்குச்சாவடி எங்கு இருக்கிறது என்று தெரியவில்லையே என்று கவலைப்படுகிறார்களா? உங்கள் கவலை நீக்க உங்களுக்கு உதவி செய்கிறது இந்திய தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள வாக்காளர் உதவி செயலி (voter Help line).


வாக்குச்சாவடியை எப்படி தெரிந்து கொள்வது?

உங்களது வாக்குச்சாவடி குறித்த தகவலை பெற இதில் உள்ள 'வோட்டர் சர்வீசஸ்' என்கிற பகுதிக்குள் செல்லவும். அதில் மொபைல் எண் மூலமாக தேடுங்கள்.. கியூ ஆர் கோடு மூலமாக தேடுங்கள், பிற விவரங்கள் மூலமாக தேடுங்கள், வாக்காளர் அடையாள அட்டை எண் (எபிக் நம்பர்) என 4 ஆப்ஷன்கள் இருக்கும்.

வாக்காளர் அடையாள அட்டையோடு இணைக்கப்பட்ட செல்போன் எண் உங்களுக்கு தெரிந்தால் அதன் வழியாக உங்கள் வாக்குச்சாவடியை தெரிந்து கொள்ளலாம். அதே போல உங்களது பூத் சிலிப்பையும் நீங்களாகவே பெற்றுக்கொள்ளலாம்.டவுன் லோட் இ எபிக்' என்ற பகுதியை தொட்டு உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும், மாநிலத்தையும் பதிவு செய்தால் உங்கள் பூத் சிலிப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அடையாள அட்டையில் உள்ள அடையாள அட்டை (எபிக்) எண்ணை பதிவு செய்தும் வாக்குச்சாவடியை கண்டு பிடிக்கலாம். அடையாள அட்டை இல்லாவிட்டாலும் உங்களது பெயரையும், வாக்காளர் அட்டையில் உள்ள உறவினர் பெயரையும், உங்கள் தொகுதியையும் பதிவு செய்தால் போதும் உங்கள் வாக்குச்சாவடிஇருக்கும் இடத்தையும் வாக்கு செலுத்தும் அறை எண்ணையும் கண்டுபிடித்துவிடலாம்.

அட! இவ்வளவு தானா ஆமாங்க... ரொம்ப எளிமையான விஷயம்தான்... வோட்டர் கெல்ப் லைன் செயலியை பயன்படுத்துவோம். கவலைகள் எதுவுமின்றி வாக்களிப்போம்

Tags:    

மேலும் செய்திகள்