வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

வால்பாறையில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2022-05-19 23:17 IST

வால்பாறை, 

வால்பாறை அருகே சிங்கோனா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் அசோக் (வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்து இருந்தார். அந்த வேலை அவருக்கு கிடைக்கவில்லை. மேலும் கடந்த சில மாதங்களாக பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காததால் மனஉளைச்சலுடன் காணப்பட்டார்.

இதனால் விரக்தி அடைந்த அசோக் தனது தாயிடம் எனக்கு வேலை கிடைக்காமல் போய்விட்டது என கூறிக்கொண்டே வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அசோக் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த வால்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்