குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா உடையார்கோவில் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மகன் கரிகாலன் (வயது28). பாலியல் வழக்கில் தொடர்புடையவர். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரையின்பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து கரிகாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அவரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.