பொள்ளாச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

பொள்ளாச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது;

Update:2022-12-21 00:15 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 41). தொழிலாளி. இவர் வேலை முடித்து விட்டு பத்ரகாளியம்மன் கோவில் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.450 பணம் பறித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நாகமணி (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்