கஞ்சா, மதுபாட்டில்கள் விற்ற வாலிபர் கைது

விழுப்புரம் அருகே கஞ்சா, மதுபாட்டில்கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-08-02 19:35 IST

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்படி அவரது தனிப்படை போலீசாரும், காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசாரும் விழுப்புரம் அருகே கோனூர் கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்த பையினுள் 30 கிராம் கஞ்சா பொட்டலங்கள், புதுச்சேரி மாநில 30 மதுபாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர், கோனூர் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் இளையராஜா (வயது 28) என்பதும், இவர் அதே பகுதியில் கஞ்சா, மதுபாட்டில்கள், சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இளையராஜாவை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சா, மதுபாட்டில்கள், சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்