தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

ஆம்பூர் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-08 17:32 GMT

ஆம்பூர்

ஆம்பூர் அனீஸ் நகரை சேர்ந்தவர் ரயீஸ்அகமது (வயது 30). இவருக்கும் புதுமனையை சேர்ந்த அருணாசலம் (23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று  இரவு இவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஆத்திரமடைந்த அருணாசலம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரயீஸ் அகமதுவை குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்