பெண்களிடம் நகைகள் பறித்த வாலிபர் கைது

பெண்களிடம் நகைகள் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-10-04 01:21 IST

திருச்சி கே.கே.நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாலையில் ஒரு மர்ம ஆசாமி வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டான். இதேபோல் கடந்த 1-ந்தேதி கே.கே.நகர் ஆசாத் நகரில் அதிகாலை துளசி இலை பறித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சுமார் 9 பவுன் தங்க தாலி சங்கிலியை அடையாளம் தெரியாத நபர் பறித்து சென்றதாக கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மதுரை சிறையில் இருந்து வெளியில் வந்த முகமது உசேன் (வயது 28) என்பவர் கே.கே.நகரில் நடந்த பாலியல் துன்புறுத்தல், நகை பறித்த வழக்குகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் இவர் கோவை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, நெல்லை, திருப்பூர் மற்றும் ஈரோடு என பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 30 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை திருச்சி மாநகர தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாநகர கமிஷனர் கார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்