யூ-டியூப் பிரபலம் டி.டி.எப். வாசன் மீது வழக்கு
யூ-டியூப் பிரபலம் டி.டி.எப். வாசன் மீது வழக்கு;
கோவை
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள முத்துக்கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் டி.டி.எப். வாசன். இவர் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு, அதை வீடியோவாக பதிவு செய்து, யூ-டியூப் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். இதன் மூலம் பிரபலம் அடைந்ததோடு, சர்ச்சைகளிலும் சிக்கினார். மேலும் அவ்வப்போது வன்முறையை தூண்டும் வகையில் சில கருத்துகளையும் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் டி.டி.எப்.வாசன், ஒரு யூ-டியூப் செய்தி சேனல் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்துவேன் எனக்கூறி ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் காரமடை போலீசார் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.