கொரோனா வைரஸ் சீனாவின் "மிக மோசமான பரிசு" டிரம்ப் குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் சீனாவின் "மிக மோசமான பரிசு" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2020-06-05 16:24 GMT
வாஷிங்டன்,

வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சீனா அமெரிக்காவைப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டது, சீனாவை மீண்டும் கட்டியெழுப்ப நாங்கள் உதவினோம், அவர்களுக்கு ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர்களை வழங்கினோம். சீனாவுடனும் பல நாடுகளுடனும் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் எவ்வளவு முட்டாள்தனமானவர்கள்.

நாங்கள் உலகத்துடன் இணைந்து செயல்படுகிறோம், நாங்கள் சீனாவுடனும் இணைந்து செயல்படுவோம். எல்லோரிடமும் பணியாற்றுவோம். ஆனால் நடந்தது ஒருபோதும் மீண்டும் நடந்து விடக்க்கூடாது.  வைரஸ் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

உலக நாடுகளுக்கு சீனா வழங்கிய பரிசு. இது நல்ல பரிசல்ல.அவர்கள் அதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். மிகவும் மோசமான பரிசு.  இதனை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் மிக மோசமான பரிசை உலகிற்கு சீனா வழங்கி விட்டது.

உகானில் உருவான அந்த வைரஸ் மிக மோசமான பிரச்சினைகளை உருவாக்கியது. ஆனால் அது சீனாவின் மற்ற பகுதிகளுக்கு செல்லவில்லை. அது எப்படி நடந்தது. இதை தான் உலகம் கேட்கிறது.

கடந்த வாரம் என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் பார்த்தோம், அதனை நடக்க விட்டு இருக்க கூடாது. இது நம் நாட்டுக்கு நடந்த ஒரு பெரிய விஷயம். சமத்துவத்தின் அடிப்படையில் இது அவருக்கு ஒரு சிறந்த நாள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்