அமெரிக்கா எச்சரிக்கையை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

அணு ஆயுத வல்லமை கொண்ட நாடான வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

Update: 2021-10-01 02:28 GMT
பியாங்யாங், 

உலக நாடுகள் கொரோனா வைரஸ் பரவலால் கடும் நெருக்கடிகளை சந்தித்து வரும் சூழலிலும் வடகொரியா தனது வழக்கமான அடாவடி நடவடிக்கையில் இருந்து பின்வாங்க மறுத்து வருகிறது. அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் வடகொரியா கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு அதிர வைத்து வருகிறது.  

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 3 முறை ஏவுகணை சோதனை நடத்தியது. 

இந்த நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக வடகொரிய அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஏவுகணை சீறிப்பாயும் காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.  எனினும், தென்கொரியா இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை. 

மேலும் செய்திகள்